×

ரேசர் –திரை விமர்சனம்

பைக் மற்றும் கார் ரேஸ் பற்றி சில படங்கள் வந்துள்ளன. அதிலிருந்து மாறுபட்டு, பைக் ரேஸ் பற்றி முழுமையாக சொல்லப்பட்டுள்ள படம் இது. பெற்றோருக்கு ஒரே மகன் அகில் சந்தோஷ். இதுதான் படிக்க வேண்டும், உன் எதிர்காலம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வழக்கமான அப்பாவாக சுப்பிரமணியன் போடும் உத்தரவுகளுக்கு கீழ்ப்படிய விரும்பாத அவர், தன் லட்சியம் பைக் ரேசர் ஆவது மட்டுமே என்பதில் உறுதியாக இருக்கிறார். அதன்படி பெற்றோருக்கு தெரியாமல் பைக் ரேஸ் கோச்சுக்கு சென்று தகுதி பெற்று, ஸ்ட்ரீட் பைக் ரேஸ் முதல் அனைத்து பைக் ரேஸ்களிலும் கலந்துகொள்கிறார்.

இதற்கிடையே, தனக்கு சப்போர்ட் செய்யும் லாவண்யாவை காதலிக்கிறார். நண்பர்களின் துணையுடன் அகில் சந்தோஷ் தனது பைக் ரேஸ் லட்சியத்தில் வென்றாரா? அவரது பெற்றோர் ஆசை நிறைவேறியதா என்பது கதை. எடுத்துக்கொண்ட சப்ஜெக்ட்டில் இருந்து விலகாமல், பைக் ரேஸ் பற்றிய விவரங்களை பாமரருக்கும் புரியவைத்த இயக்குனர் சதீஷ் ரெக்ஸ் பாராட்டுக்குரியவர். நிஜ ரேஸ் வீரர்களுடன் போட்டி போட்டு பைக் ஓட்டி சாகசம் படைத்துள்ள அகில் சந்தோஷ், வசனங்களை உணர்ச்சிகரமாகப் பேசி நடிக்க கற்றுக்கொண்டால் ஒரு ரவுண்டு வரலாம்.

கொள்கையில் உறுதியாக இருந்து, இலக்கை நோக்கி மட்டுமே பயணித்தால், சாதிக்க முடியாதது என்று எதுவும் இல்லை என்ற கருத்தை போதிக்கிறது படம். கிரிக்கெட் அளவுக்கு ஏன் பைக் ரேஸ் பற்றிய விழிப்புணர்வும், பரபரப்பும் மக்களிடம் இல்லை என்பது பற்றியும் படம் பேசுகிறது. லாவண்யா அழகாக இருக்கிறார், அடக்கமாக நடித்துள்ளார். நடுத்தரக் குடும்பத்தின் அப்பாவை பிரதிபலித்துள்ளார், சுப்பிரமணியன். மெக்கானிக்காகவே மாறிவிட்டார், ஆறுபாலா. ரேஸ் காட்சிகளில் பிரபாகரின் கேமரா நன்கு உழைத்துள்ளது. அவருக்கு பரத்தின் பின்னணி இசை உதவியுள்ளது. கிளைமாக்ஸ் பெரிதாக ஈர்க்கவில்லை.

The post ரேசர் – திரை விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Akhil Santosh ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கர்ப்பிணிகளுக்கான பேஷன் ஷோவில் அமலா பால்